பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 6 1 எல்லாங் கைகூடும்; மேலும், துறவிகளுக்குச் சமமாக எண்ணப்படுவார் அவர். 'உள்ளிய வெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்.' (தி. கு. 309) "இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை.' (தி. கு. 310) தீயொழுக்கக்தை விட்டுவிடுவதற்கு ஒவ்வொன்றையும் சிறப்பித்துச் சொல்வது போலவே, நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கும் ஒவ்வொன்ருகச் சிறப்பித்துக் கூறுகிறர். ஒன்றைப் பழகின.பின் மற்ற நல்லொழுக்கங்கள் படிப்படியாக வந்துவிடும் என்ற மன இயல்பை அறிந்து அவ்வாறு கூறுகிருர். 7 இனிய சொல்லாகப் பேசுதலாகிய வாக்கு நலம் ஒன்றைக் கடைப்பிடித்தால் போதும், அறம் பெருகும்; அறம் அல்லவை தேயும். 'அல்லவை தேய அறம்பெருகும் கல்லவை நாடி இனிய சொலின்." (தி. கு. 96)