பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் அறிவு ஆலயம் (ஆசிரியர் - குறள் ஒளி) 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு." உலக ப் பொது நூ ல்: உலக முழு நூ ல்: உலகப் பொது ம க ன்: அகரமாகிய முதல் எழுத்தில் தொடங்கி ஆயிரத்து. முந்நூற்று முப்பது அருங் குறள்மணிகளைத் தந்தவர் இந்த உலகி னில் நம் தமிழகத்தில் தோன்றிய உலக மேதையான திருவள்ளு வராகும். அவர் தோற்றுவித்த இந்த நூல் ஒப்பற்ற ஒன்று. உலகினில் தோன்றிய பேரறிஞர்கள் ஆக்கிய இலக்கியங்களுக் கெல்லாம் முதன்மையாகப் போற்றப்படுகிறது. இஃது என் கருத்து அன்று, ஆன்ருேர் கருத்து. இதனை இந்நூலின்கண் முற்பக்கங் களில் படித்திருப்பீர்கள். திருக்குறள் தமிழ்கிலத்தின் சொந்தச்சொத்து எனக் கொண்டாலும் அது இவ்வுலகின் பொதுச் சொத்தாகும். வள்ளுவரும் தமிழ்த்தாயின் சேயாலுைம், அவர் செயலை நோக்கி, இவ்வுலகமாதாவின் சேயெனல் பொருந்தும். எனவேதான், நமது தேசிய கவி சுப்பிரமணிய பாரதியாரும், வள்ளுவரையும் குறளே யும்பற்றிக் கூறுமிடத்து,