பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருவள்ளுவர் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு.' -என்ருர். ஆம், வள்ளுவர் திருக்குறள் வழியாய் அறவுரையும், அறிவுரையும் கூறியது நம் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல;உலகத் திலுள்ள அத்தனை நாட்டு மக்களுக்குமாகும். ஆதலால்தான் உலகப் பெரியார்கள் அனைவரும் அன்றுமுதல் இன்றுவரை வள்ளு வரையும் அவர் இயற்றிய குறளையும் போற்றிப் புகழ்கிறர்கள். அதறல் தமிழ் நாட்டுக்கும் தமிழ்மக்களுக்கும் அப்புகழ்ச்சி பங்காகிறது. வள்ளுவர் காலத்திலுள்ள மக்களுக்கு என்னென்ன பண்பாடுகள் இருந்தனவோ - இருக்க வேண்டுமென்று அவர் விரும்பிளுரோ அத்தனையும் குறளில் குறிக்கப்பட்டிருக்கின்றது. அவைகளை இக்காலத்திலுள்ள ம க் க ளு ம் போற்றுகின்றர்கள். ஆதலால், மனித வாழ்க்கையின் அளவுகோல் திருக்குறள் என லாம். மக்களா, மாக்களா எனத் தெரிந்துகொள்ள இந்த அளவு ாக்காலத்திற்கும் பயன்படும். திருவள்ளுவரும் திருக்குறளும் திருவள்ளுவர் கடைச் சங்க காலத்தவர் என்று தமிழ் நூல் வரலாற்ருசிரியர்கள் கூறுகின்ருர்கள். கடைச் சங்ககாலத் தொகை நூல்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று சொல்லப்படும் சங்க இலக்கியங்களுள் திருவள்ளுவர் காலப் புலவர்கள் பலர் பாடிய பாடல்கள் இருக்க, வள்ளுவர் பாடல்கள் மூன்றுங்கூட வைகளில் காணப்படவில்லை. எனவே, தம் காலத் நையுங் கருத்தையும் பிறவற்றில் செலுத்தாமல் தி ருக் குற ள்'