பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 75 என்ற ஒப்பற்ற நூலொன்று செய்யவேண்டுமென்று திட்டமிட்டுச் செய்ததாகத் தெரிகிறது. தம் வாழ்நாளின் கடைசிப் பாகத்தில் இந்நூலே ஒரு பூரண நூ லாக ஆக்கியிருக்கவேண்டுமென்றும், அதற்குமுன், தம் நூலறிவு, மதிநுட்பம் ஆகியவைகளைப் பயன்படுத்தி, கருத்துக்களைக் குறித்து வைத்திருக்க வேண்டுமென்றும் திருக் குறளே நுணுகி ஆராய்ந்த தமிழறிஞர்கள் அபிப்பிராயப்படு கிருர்கள். மேலும், அவர் அந்நூலைச் செய்யும்போது தமிழ் நாட்டவரை மட்டுமல்லாது, அகில உலக மக்களையும் முன்வைத் தும், அக்காலத்துக்கு மட்டுமல்லாது எக்காலத்துக்கும் பொருங் தும்படியாகவும் செய்யக் கருதியிருக்க வேண்டுமென்றுங் கருது கிருர்கள். அதல்ைதான், தி ருக்கு ற ள் பொதுமறையென்றும், மக்கள் வாழ்க்கை நூலென்றும் போற்றிப் புகழப்படுகிறது. திருவள்ளுவரும், அவரது நினைவுச் சின்னமும் உலகம் போற்றும் உலகப் பொதுநூல் அருளிய உலக மேதைக்கு ஒரு நினைவுச் சின்னம் ஏற்படுவதென்ருல் - அது, உலகம் அறியக் கூடியதும், உலக மக்கள் அனைவருக்கும் பொது வானதும், உலக மக்கள் அனைவருடைய ஒத்துழைப்பைப் பெற்ற தும், உலகப் பேரறிஞர்கள் அனைவருக்கும் நினைவுச் சின்னங்கள் அமைந்ததும், உலக மக்கள் அனைவரும் வந்து பார்க்கத் தக்க வசிதியுடையதும், உலக அறிஞர்கள் கூடி உலகச் சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய மாபெரும் மண்டபம் அமைந்ததும், உலக அறிவு