பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 77 வீடுகளும் மும்மூன்று மாடிகள் உடையனவாகவும், ஒவ்வொரு விடும் ஒவ்வொரு பெரியவர்கள் பெயராலும் விளங்கவேண்டும்." வாசுகியம்மையார் இல்லம், பாரதியார் இல்லம், காந்தி இல்லம், கஸ்தூரி இல்லம் போல்வன. அறிவாலயமும், பல்கலைக் கழகமும் திருவள்ளுவர் அறிவாலயத்தில் சிறந்ததொரு பல்கலைக் கழகம் நடைபெற வேண்டும். பல்கலைக் கழகக் கல்வித் திட்டங் -களில் - சாதி சமய வேற்றுமைகளையும், மொழி வேற்றுமைகளே யும் வேரறுக்கும் அம்சங்கள் இடம் பெற வேண்டும். உலக நாகரிக நாடுகளிலுள்ள பல்வேறு தொழில் நுணுக்க அம்சங்களும் பாடத் திட்டங்களில் அமைந்திருக்க வேண்டும். பாடங்கள் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்பட வேண்டும். ஆல்ை,

  • வ. உ. சிதம்பரனர், படேல், திருப்பூர் குமரன், எம். சி. ராஜா, பன்னீர் செல்வம், மணிமேகலை, ஒளவை, கண்ணகி, கோப்பெருந்தேவி, மாணிக்கவாசகர், சுந்தரர், சம்பந்தர், ஷேக்ஸ் பியர், பிளோட்டோ, திரு. வி. க., சாக்ரடிஸ், சுபாஸ் போஸ், இராமலிங்க அடிகளார், கால்டுவெல், ஜி. யூ. போப், மறைமலை அடிகள், இங்கர்சால், மார்டின் லூதர், லெனின், மோதிலால் நேரு, ஸ்டாலின், வீரமாமுனிவர், விவேகானந்தர், இராமகிருஷ் ணர், பனகால் அரசர், தியாகராயர், அம்பேத்கார், தொல்காப்பி யர், பவணந்தியார், மயிலைநாதர், நாகம்மையார், கச்சிருர்க்கினி யர், பரிமேலழகர், மணக்குடவர், தருமர் முதலிய பல பெரியவர் கள் பெயர்களும் இடலாம்.