பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 - திருவள்ளுவர் குறள் தமிழிலேயே கற்பிக்கப்பட வேண்டும். திருக்குறளைக் கற்கும் அளவுக்குத் தமிழ் அறிவு வளம் பெறுதல் நலம். நூல் நிலையமும் வாசக சாலையும் அறிவாலயத்தில் முதற்பகுதியில், அதாவது முதல் மாடியில் பெரியதொரு நூல் நிலையம் இருக்கவேண்டும். நூல் கிலேயத்தில் மக்களுக்கு மெய்யறிவை வளர்க்கத் தக்கனவும், மக்களது ஒற்றுமைக்கு உதவியாகக் கூடியனவும், சிறந்த பண் பாடுகளை உருவாக்கக் கூடியனவுமான சிறந்த நூல்களே பொறுக்கி ாடுத்து வைக்கப்பட வேண்டும். மூட நம்பிக்கைகளை உண்டாக் கும் நூல்கள் அங்கு இடம் பெறலாகாது. இங்கர்சால் சொல் வதுபோல் மூட நம்பிக்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்பட வேண்டும். அவர் சொல்வதாவது : 'சிந்தனை சந்தேகத்தை வளர்க்கும் சந்தேகம் ஆராய்ச்சியை வளர்க்கும் ஆராய்ச்சி மெய்யறிவை வளர்க்கும் மெய்யறிவு மூடநம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைக்கும்.' நூல் நிலையத்தில் முதற் பிரிவில் - திருக்குறள் பற்றிய நூல்கள் இடம் பெற வேண்டும். தமிழில் வெளியான திருக்குறட் பதிப்புகள், உரைகள், அது சம்பந்தமான ஆராய்ச்சிகள் இவைகள் எத்தனை உண்டோ, அற்றனையிலும் வகைக்கு அவ்வைந்து பிரதிகள் இருக்க வேண்டும்.