பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 7. 9 ===----- அயல் மொழிகளில் பெயர்க்கப்பட்ட திருக்குறள் மூலங்கள், ஆராய்ச்சிகள், உரைகள் முதலியவைகள் எத்தனை பாஷைகளில் உண்டோ, அத்தனை பாஷை நூல்களும் வர வழைக்கப்பட்டு முறையாக அமைக்கப்பட வேண்டும். இரண்டாம் பிரிவில், மக்கள் வரலாற்று நூல்கள் ஒவ் வொரு மொழியிலும் எத்தனை உண்டோ அத்தனையும் இருத்தல் வேண்டும். எல்லா மொழிகளிலும் இருக்கவேண்டும். மூன்ரும் பிரிவில், - என்சைக்ளோபேடியா என்னும் பெயருடைய நூல்களில் பலவகைப்பட்டவைகளும் இருக்கை பெறல் வேண்டும். நான்காம் பிரிவில், மொழி வரலாற்று நூல்கள் பல மொழிகளிலும் உள்ள பல புத்தகங்களும் இருத்தல் வேண்டும். ஐந்தாம் பிரிவில், தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய சிறந்த மொழிகளின் இலக்கண நூல்கள் இடம் பெறல் வேண்டும். ஆரும் பிரிவில், பூகோள நூல்களும், பூமிக்குட்படு பொருள்விளக்க நூல்களும் இருத்தல் வேண்டும். ஏழாவது பிரிவில், பல நாட்டு வான நூல்களும், பல வகைப்பட்டவைகளும் இடம் பெறுதல் வேண்டும். எட்டாவது பிரிவில், தாவர நூல்களும், ஒன்பதாவது பிரிவில், பிராணி நூல்களும், பத்தாவது பிரிவில், மனித உடற் கூற்று நூல்களும் அமைய வேண்டும்.

  • E n cy clop a di a - Brit a ni c a.

IF - C at h o li c. I – S w e di s h, FF - Germania.