பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 O திருவள்ளுவர் பதினேராவது பிரிவில், விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட பலவகை நூல்கள் அமைய வேண்டும். பன்னிரண்டாவது பிரிவில், மூட நம்பிக்கைகளை ஆதரிக் காதவை என்று பரிசோதனைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழ் இலக்கியங்கள், பிறமொழி இலக்கியங்கள் இருக்க வேண்டும். மற்ற வகை நூல்கள் செயற்குழுவினரால் தேர்ந்து எடுக்கப்படும். வாசக சாலையில் தினப்பத்திரிகைகள் தமிழ், ஆங்கில மொழிகளிலுள்ளவைகள் வரவேண்டும். வாரப் பத்திரிகைகள், மாதப் பத்திரிகைகள் பொறுக்கி எடுக்கப்பட்ட சிறந்தவைகளே இருக்க வேண்டும். அறிவாலயமும் அர்சகமும் அறிவாலயத்தில் சிறந்த அச்சகமொன்று அமைக்கப் படல் வேண்டும். மாதப்பத்திரிகையுந் தினப்பத்திரிகையும் அதில் இருந்து வெளியிடப்படும். 'திருவள்ளுவர்' என்னும் பெயர் அதற்கு இடலாம். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவை கடை பெறும். திருவள்ளுவர் அறிவாலயச் செயல் முறைகளுக்குப் பாதி இடமும், திருக்குறள் விரிவுரைகளுக்கும், மற்ற அறிவுக் கட்டுரைகளுக்குப் பாதி இடமும் ஒதுக்கப்படும். புத்தக ரூபமான சில வெளியீடுகளும் அதிலிருந்து வெளி யிடப்படலாம். பல்கலைக் கழகத்திற்கு வேண்டிய புத்தகங்களும் அதிலிருந்தே பிரசுரஞ் செய்யப்படலாம்.