பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் , B 3 அதற்காக, அது பல பணிக் குழுக்களை அமைத் து நல்ல முறையில் அவைகளைக் கொண்டு செயலாற்றும். 1. ஒ ற் றர் கு மு :- இக்குழு, உலகத்தில் நிகழும் நிகழ்ச்சிகளில் மக்களுக்குத் துன்பங் தரும் நிகழ்ச்சிகளை ஆங்காங்கு அறிந்து, அங்கிருந்தபடியே அறிவாலயத் தலைமை ஆபீசுக்கு விவரமாகத் தெரிவிக்கும். 'எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதன் வேந்தன் தொழில்..' - தி. கு. 582. என்னுஞ் செயலை இக்குழு மேற்கொண்டு பணிசெய்யும். - 2. உ. த வி க் குழு :- ஒற்றர் குழுவின் அறிக்கை யைத் தலைமைச் செயலகம் விளக்கி, உதவிக் குழுவுக்கு ஆணை யிடும். உதவிக் குழு துன்பம் நடைபெறுமிடத்திற்கு விரைந்து சென்று அத்துன்பத்தை நீக்க முயலும். 'உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.' - தி. கு. 788. என்ற விதிப்படி இக்குழு பணிசெய்யும். 3. அரசி ய ல் பி ண க்கு நீ க் குங் குழு : அரசாங்கங்களுக்குள் நடைபெறும் சிக்கல்களை ஒற்றர் குழுவின் அறிக்கையின் மூலம் தலைமை ஆபீசிலிருந்து அறிந்து, அவைகளைத் தீர்க்கும் விஷயமாய் இக்குழு முயற்சி எடுக்கும் இக்குழுவின் அங்கத்தினர் தேர்ந்த அரசியல் நிபுணர்களாயிருப்பார்கள்.' யுத்தங்கள் ஏற்படாதபடி தடுப்பதிலும் இக்குழுவினர் கவனஞ் செலுத்துவார்கள். உலக அரசாங்க மகாநாடுகளில் கலந்துகொள்ளும் உரிமை இவர்களுக்குக் கிடைக்கும்படி அறிவா லயத் தலைமை ஆபீசு நடவடிக்கை எடுக்கும்.