பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 87 ஹோமியோபதி வைத்தியம் ஆகிய பிற வைத்தியம் பயின்றவர் களும் இக்குழுவில் இருப்பர்.

  • பிணியனைத் தனது பிள்ளைபோல் எண்ணி

அணிமொழி பேசி ஆக்கங் கூறிப் பணுந்துணையெல்லாம் பண்ணி மருந்தீ குணமுடை வைத்தியன் குவலயத் திறயே ' என்பதனைச் செயலாக்கும் முறையில் பணியாற்றுவர். 12. பொதுநலக் குழு:- மேலே குறிப்பிட்டவைகள் போக வேறு ஏதேனும் கலம் செய்ய வேண்டியதிருந்தால் அவை களைக் கவனித்துச் செய்ய இக்குழு காத்திருக்கும். 13. அறிவியல் குழு :- இக்குழு கல்லூரியில் நல்ல விதமான கல்வி கற்பிப்பதற்கும், எ ன் னெ ன்ன வகைகளில் மக்கள் அறிவடைய வேண்டியது நலமென்று தெரிகிறதோ அவ்வகைகளில் அறிவைப் புகட்டுவதற்கும் இக்குழு காத்து இருக்கும். அறிவாலயமும் கனிமரங்களும் அறிவாலயக் கட்டடம் கட்டத் தொடங்கும்போதே இக்காரியம் தொடங்கப்படல் வேண்டும். கன்னியாகுமரி நாடே தேர்ந்தெடுக்கப்பட்டால், கடல் தண்ணீரை நல்ல தண்ணீராக்கும் இயந்திரம் வைத்து, நல்ல தண்ணீராக்கி, கட்டட வேலைக்கு அதைப் பயன்படுத்துவதுடன் கனி மரங்களுக்கும் பயன்படுத்தலாம். அறிவாலய ச் சுற்று மதிலுக்குள் பலவகைப்பட்ட கனிமரங்களைத் தொடக்கத்திலேயே கட்டுவளர்த்தால் கட்டடங்கள் கட்டித் தீருவதற்குள் மரங்கள் கனி கொடுக்கத் தொடங்கிவிடும். அறிவாலயம் ஒரு சோலைக் குள் இருப்பதாகக் காட்சியளிக்கும். கி. பி. 1970-ல் திருவள்ளு வரின் இரண்டாயிரம் ஆண்டு நிறைவு விழா நடைபெறும்போது திருவள்ளுவர் அறிவு ஆலயம் ஒரு அழகிய மரங்களடர்ந்த நகரம் போல் தோன்றும். அயல் நாட்டவர் பார்த்து வியப்படைவர்.