பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 திருவள்ளுவர் அறிவாலயமும் அதற்குரிய கிதியும் அறிவாலயம் அளவிலும், த ன் மை யி லும் உலக அதிசயங்களில் ஒன்ருகவும், மற்றவைகளுக்கு அரசாகவும் விளங்கவேண்டுமானல், தமிழ்நாடு மட்டுமன்று, பரத கண்டம் மட்டுமன்று, ஐந்து கண்டத்தினரும் கலந்து செய்யவேண்டும். அகில உலக ஆதரவு வேண்டும். இம்மாபெரும் நினைவுச் சின்னம் அமைக்கக் குறைந்தது பத்துக்கோடி ரூபாயாவது வேண்டும். அவ்வளவு செலவுசெய்து கட்டிமுடித்துச் செயல்படும்போது கணித்தோமானல், முப்பது கோடி ரூபாய்க்கு மதிக்கக்கூடியதாயிருக்கும். அதன் நோக்கப் படி - செயல் ஆகி - எல்லோரும் இன்புற்றிருக்க வ ழி செய்து விட்டால், அதன் மதிப்பை எவராலும் கணிக்கமுடியாது. அது உலகப் பொதுமக்கள் சொத்தாகவே என்றும் கின்று நிலவும். இன்ப நிலையை உறுதி செய்வதே அதன் கடமையாகும். இப்பெரிய நிதியைச் சேர்ப்பது கடினமான காரியம் தான். ஆல்ை, முடியாத காரியமன்று. முயற்சி திருவினை ஆக்கும்'-தி. கு. 2.16; எண்ணிய எண்ணியாங் கெய்துப - தி. கு. 666; ஞாலங் கருதினும் கைகூடும் - தி. கு. 48 என்றெல்லாம் வள்ளுவர் உறுதி கூறுகிறர். ஒருவர் கருத்துக்கே இவ்வளவு உயர்வு வாய்க்கு மால்ை, உலகப் பெரியோர்கள் பலர் கருதுவார்களானல், பத்துக் கோடி ரூபாய் சேர்ப்பது ஒரு பெரிதாகாது. அறிவாலய நிதியும் /0ாகாண அரசாங்கக் கடமையும் தமிழ்நாட்டு அரசாங்கமாகிய சென்னை அரசாங்கம் மூன்றவது ஐந்தாண்டுத் திட்டத்தில்-திருவள்ளுவர் அறிவாலயத் தி|கு மிதி சேர்க்கும் காரியத்தையும் சேர்த்துக்கொண்டு சர்க்கார்