பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் 8 9 கஜாளுக்களில் அதற்கு ஒரு கணக்குப் போட்டு, நன்கொடைத் தொகைகளை வரவேற்றுப் பெருக்கி வரவேண்டும். நிதி அமைச்சர் - இவ்விஷயத்தில் கவனஞ் செலுத்தி நிதி சேர்க்கும் வழி செய்யவேண்டும். பொதுமக்களின் நல்வாழ்வுக்காக - எல்லோரும் இன்புற் றிருக்கச் செயல்புரியும் திட்டத்திற்காக நிதி சேர்ப்பது - மக்கள் நல்வாழ்வை விரும்பும் அரசாங்கத்திற்கு விருப்பத்தை உண்டாக் காமற் போகாது. அரசாங்கம் செய்யவேண்டிய காரியங்களின் ஒரு பகுதியே இதுவாதலால், அத்தகைய அரசாங்கம் இதை வரவேற்று ஆதரவு செய்யவே விரும்பும். அறிவாலய நிதியும் மத்திய அரசாங்கக் கடமையும் திருவள்ளுவர் தமிழ் நிலத்தவர்; அதேபோல பரதகண்டத் தவர் - இந்தியர். அவர் பெயரால் செய்யப்படும் காரியத்திற்கு மத்திய அரசாங்கமும் ஆதரவளிப்பது கடமையாகும். மூன்ருவது ஐந்தாண்டுத் திட்டத்தில் திருவள்ளுவர் அறிவாலயம் பற்றிய செயலையும் சேர்த்துக் கொண்டு - சென்னை அரசாங்கத்திற்கு அனுமதியளிப்பதுடன், மத்திய அரசாங்கச் சார்பில் பொருள் ஒதுக்கி அதைச் சென்னை அரசாங்கத்தின் வாயிலாக அளிப்பது சாலச் சிறந்ததாகும். அறிவாலயம் கட்டப்பட்டு, அதன் திட்டப்படி செயலாகு மால்ை தமிழ்நாட்டுக்கும், தமிழ் மாநில அரசுக்கும், இந்தியா வுக்கும், இந்தியப் பேரரசுக்கும் வெளியுலகப் பெரும் புகழ் வருவது திண்ணம்.