பக்கம்:திருவள்ளுவர் அறிவு ஆலயம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை. பெரியோர்களின் அறிவுரைகள் வேண்டப்படுகின்றன: திருவள்ளுவருக்கு ஒரு மாபெரும் ஆலயம் அமைத்து அதன் வழியாக அப்பெரியாருக்கு ன் றி தெரிவிக்கும் திருப்பணியை, என் சிற்றறிவுக்கு எட்டியமட்டும் இச் சிறு நூலில் எடுத்துக் கூறியிருக்கின்றேன். தங்கள் பேரறிவின் முன் என் கருத்துக்களை வைத்துச் சிந்தித்தால் இன்னும் உயர்ந்த கருத்துக்கள் தங்களுக்குத் தோன்றும். அவைகளை உரைவடிவிலோ, காவிய வடிவிலோ, ஒவிய வடிவிலோ தீட்டி எனக்கு அனுப்பினால், அவை களே அவரவர் பெயர்களுடன் தொடர்புபடுத்தி, அடுத்த பதிப்பில் சேர்த்து வெளியிடத் தயாராயிருக்கின்றேன். அவ்வெளியீட்டால் ஈட்டப்படும் நிகர லாபத்தில் ஒரு பகுதியைத் திருவள்ளுவர் ஆறிவு ஆலய நிதியில் சேர்த்து விடுவதாகவும் உறுதி கூறுகின்றேன். அறிவுத் தாய் தந்தையர் தேவை:- யான் ஆண்டிலும், அறிவிலும் இளைஞன். எல்லோரும் இன்புற்றிருக்கும் நிலை செயலில் அமையவேண்டும் என்பது என் பேரவா. அவ்வவாவே, என்னை இந்நூலாக்கும் பெரும்பணிக்கு உங்திற்று. இது போன்ற பல பணிகள் செய்தேனும் அங்கிலையை மக்கள் அடையவேண்டும் என்பது என் வாழ்க்கைக் குறிக்கோள். எனது இக்குறிக்கோளுக்கு இணங்கிய அறிவுரை களும், செயல்திட்டங்களும் எனக்குப் புகட்டிவர வயதைத் தாண்டிய-பேரறிவும் பெருநோக்கும் கொண்ட தாய் தந்தையர் வேண்டும். இச்சிறு நூலைப் பார்க்க அல்லது கேட்க வாய்ப்புப் பெற்ற பெரியோர்கள் என் வேண்டுகோளை நன்கு மதித்து என்னை அறிவு மகனக (மானத புத்திரன்) ஏற்று அறிவு புகட்டிவர அன்புடன் வேண்டி நிற்கின்றேன். ப, இராமசாமி.