பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

இ-ள்:- யா காவாராயினும் நா காக்க-எல்லாவற்றையும் அடக்கில ராயினும் நா ஒன்றினையும் அடக்குக, காவாக்கால் சொல் இழுக்குள்பட்டு சோகாப்பர்-அதனை அடக்காக்கால் சொல் சோர்வுள் பட்டுத் தாமே சோகிப்ப ராதலான்.

இது, நாவடக்கம் இல்லாதார் சோகத்தின்மாட்டே பிணிக்கப்படுவ ரென்றது. ௨௬௫.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும்; ஆறாதே
நாவினால் சுட்ட வடு.

இ-ள்:- தீயினால் சுட்ட புண் உள் ஆறும்-தீயினால் சுட்ட புண் உள்ளாறித் தீரும்; நாவினால் சுட்ட வடு ஆறாது-நாவினால் சுட்ட புண் (ஒரு காலத்தினும்) தீராது.

இது, நாவடக்கம் இல்லாதார்க்குப் பிறர் பகையாகித் தீங்கிழைப்ப ரென்றது. ௨௬௬.

ன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்,
நன்றாகா தாகி விடும்.

இ-ள்:- ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின்-ஒரு சொல்லேயாயினும் (கேட்டார்க்கு இனியதாயிருந்து) தீய சொல்லின் பொருளைப் பயக்குமாயின், நன்று ஆகாதது ஆகி விடும்-(சொல்லியது முழுவதும்) நன்மை ஆகாதாயே விடும்.

[ஆகாதது என்பது ஆகாது எனக் குறைந்து நின்றது.]

இஃது, ஒருவன் சால மொழி கூறினாலும் தீதா மென்றது. ௨௬௭.

ல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

இ-ள்:- பணிதல் எல்லார்க்கும் நன்றாம்-அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம்