பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவற வியல்

இ-ள்:- புறம் குன்றி கண்டு அனையரேனும்-புறத்தில் குன்றி மணி நிறம் போன்ற தூயவேடத்தராயிருப்பபினும், அகம் குன்றி மூக்கின் கரியார் உடைத்து-அகத்தில் குன்றி மூக்குப் போலக் கரியரா யிருப்பாரை உடைத்து (இவ்வுலகம்). . இது, தவத்தினர் வடிவு கண்டு நேர்படா ரென்றது. [தவத்தினர் வடிவை ஒருவன் கொண்டுள்ளதாலேயே (அவன் உண்மையான தவத்தினனென்று கருதி) அவனோடு இணங்கார் அறிவுடையா ரென்றது இது.] ௨௮௨.

லியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

இ-ள்:- வலியில் நிலைமையான் வல் உருவம்-வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவஉருவம் (கோடல்), பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந் தற்று-பெற்றமானது (பிறர் பயப்படும்படிக்குப்) புலியினது தோலைப் போர்த்து (ப்பைங்கூழ்) மேய்ந்த தன்மைத்து.

(பெற்றம்-மன வலிவில்லாத நிலைமை-(பிறர் பொருளைக் கவர எழும் மனத்தைத் தடுத்து நிறுத்தும்) வலிவில்லாத தன்மை.]

இது, பிறர் பொருளைக் கவர்வானது தவவேடத்தைக் கண்டு அஞ்சற்க வென்றது. ௨௮௩.

வம்மறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

இ-ள்:- தவம் மறைந்து அல்லவை செய்தல்-தவத்திலே மறைந்து தவமல்லா தவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தால் அற்று-வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தால் போலும்.

௧0௨