பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாயிரம்

இ-ள்:- இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினை யென்னும் இரண்டு வினைகளும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார்மாட்டு - தலைவனதாகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு,

இது, புண்ணிய பாவங்கள் சேராவென்றது. ௭.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார், நீடுவாழ் வார்.

இ-ள்:- பொறிவாயில் ஐந்து அவித்தான் - (மெய் - வாய் - கண் - மூக்கு - செவி என்னும் ஐம்) பொறிகளின் வழியாக வரும் (ஊறு - சுவை - ஒளி - நாற்றம் - ஓசை என்னும்) ஐந்தின் கண்ணும் செல்லும் மனநிகழ்ச்சியை அடக்கினானது , பொய்தீர ஒழுக்க நெறி நின்றா - பொய்யற்ற ஒழுக்க நெறியிலே நின்றாரன்றே, நீடுவாழ் வார்-நெடிதுவாழ்வார்,

இது, சாவு இல்லை யென்றது. ௮.

பிறவிப் பெருங்கடல் நீந்துவார்; நீந்தார்
இறைவனடி சேரா தவர்.

இ-ள்:- (இறைவன் அடி சேர்ந்தவர்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவனது அடியைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெரிய கடலை நீந்தி யேறுவர், இறைவன் அடி சேராதார் நீந்தார் - இறைவனது அடியைச் சேராதவா அதனுள் அழுந்துவா.

இது, பிறவி இல்லை யென்றது. ௯.

கோளில் பொறியின் குணமிலவே, எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை,

இ-ள்:- கோள் இல் பொறியின் - அறிவு இல்லாத (பொறிகளையுடைய)

பாவைகள்போல், குணம் இல - ஒரு குணமும் உடைய