பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

துறவுடைமை

[உம்மை "பெயர்த்து" என்பதனோடு கூட்டியுரைக்கப்பட்டது. மற்று என்பது அசை. ஆகும் என்பது தரும் என்றும் பொருளில் வந்தது.]

இது, பொருளுடைமை பிறப்பிற்கு ஏதுவாய மயக்கத்தை உண்டு பண்ணு மென்றது. ௩௪௨.

ற்றும் தொடர்ப்பா டெவன்கொல், பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பு மிகை.

இ-ள்:- பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகை-பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றும் தொடாப்பாடு எவன்- மற்றும் சில தொடர்ப்பாடுகளை உண்டாக்குவது யாதினைக் கருதியோ?

[கொல் என்பது அசை. பிறப்பு அறுக்கல் உற்றார்-பிறப்பினை ஒழித்தற்குரிய தவத்தினைச் செய்வார். மிகை-மிகுதி, தொடாப்பாடு- பற்று.]

இது, தவம் செய்வார்க்குச் சரீரப்பற்றும் ஆகா தென்றது. ௩௪௩.

ற்றி விடாஅ இடும்பைகள், பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

இ-ள்:- பற்றினை பற்றி விடாதவர்க்கு-பொருள்களைப் பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடா-துன்பங்கள் பற்றி விடாதே நிற்கும்.

இது, பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது. ௩௪௪.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

இ-ள்:- யாதனின் யாதனின் நீங்கியான்- யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான், அதனின் அதனின் நோதல் இலன்- அதனளவு அதனளவு துன்பமுறுதல் இலன்.

௧௨௫