பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊழியல்

இஃது, ஊழே எல்லாவற்றிலும் பெரிய வலியை உடைத் தென்றது. ௩௭௪.

ல்லவை யெல்லாஅம் தீயவாம்; தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

இ-ள்:- செல்வம் செயற்கு தீயவும் நல்லவாம்-செல்வத்தை உண்டாக்குதற்கு (முன்பு தனக்குத்) தீதாயிருந்தனவும் நன்றாம்; (செல்வம் அழித்தற்கு) நல்லவை யெல்லாம் தீயவாம்-செல்வத்தை இல்லையாக்குதற்கு (முன்பு தனக்கு) நன்றாயிருந்தன வெல்லாம் தீதாம்.

ஆகூழ் உற்ற காலையில் தீயகருவிகள் நல்ல கருவிகளாய்ச் செல்வத்தை ஆக்குமென்றும், போகூழ் உற்ற காலையில் நல்ல கருவிகள் தீய கருவிகளாய்ச் செல்வத்தை அழிக்குமென்றும் இது கூறிற்று. ௩௭௫.

ரியினும் ஆகாவாம் பாலல்ல; உய்த்துச்
சொரியினும் போகா தம.

இ-ள்:- பால் அல்ல பரியினும் ஆகாவாம்-(ஊழால்) தம்முடைய பகுதியல்லாதனவற்றை வருந்திக் காப்பினும் (தமக்கு) ஆகா; தம உய்த்து சொரியினும் போகா-(ஊழால்) தம்முடைய பகுதியாயினவற்றைக் கொண்டு சென்று சொரிந்து விடினும் போகா.

[ஆம் என்பது அசை.]

இது, முன்புள்ள செல்வம் காவல்படுதலும் களவு போதலும் ஊழினாலே ஆகுமென்றது. ௩௭௬.

குத்தான் வகுத்த வகையல்லால், கோடி
தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது.

௧௩௮