பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊழ்

இ-ள்:- வகுத்தான் வகுத்த வகை அல்லால்-விதானம் பண்ணினவன் விதானம் பண்ணின வகையினால்லது, கோடி தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது-கோடி பொருளை ஈட்டினவனுக்கும் (அதனால் வரும்) பயனைக் கோடல் அருமையுடைத்து.

[விதானம் பண்ணினவன்-ஒவ்வோர் உயிரின் வினையின் பயனை அஃதஃது அநுபவிக்கும்படி விதித்தவன். வினைப்பயன் சடமாதலால், தன்னைச் செய்த உயிரை அறிந்து பொருந்தாது. அதனை அறிந்து பொருந்துவோன் கடவுளென்பது ஆசிரியர் கொள்கை. "இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து, கெடுக உலகியற்றி யான்" என்று பிறாண்டும் கூறியுள்ளார்.]

இது, பொருள் பெற்றாலும் நுகர்தற்கு ஊழ் வேண்டு மென்றது. ௩௭௭.

ருவே றுலகத் தியற்கை, திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

இ-ள்:- திரு(வினராதலும்) தெள்ளியர் ஆதலும் வேறு வேறு- செல்வமுடையராதலும் தெள்ளியராதலும் வேறு வேறு (ஊழினால் வருமா தலால்), இருவேறு உலகத்து இயற்கை-இரண்டு வகை (யாதல்) உலகத்தின் இயல்பு.

[தெள்ளியர்-அறிவுடையார். தெள்ளியராதலும் என்றதனால், திருவினராதலும் என்று கொள்ளப்பட்டது.]

இது, செல்வத்தை அளிப்பதும் அறிவை அளிப்பதும் வெவ்வேது ஊழா மென்றது. ௩௭௮.

துறப்பார்மன் துப்புர வில்லார், உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

௧௩௯