பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தார் ஓம்பல் தலை.

இ-ள்:- தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஐம்புலத்தார் - பிதிரர் தேவர் புதியராய்வந்தார் சுற்றத்தார் தான் என்னும் ஐந்திடத்தாரையும், ஓம்பல் தலை - ஓம்புதல் தலையான இல்வாழ்க்கை.

தனக்கு உண்டான பொருளை ஆறு கூறாக்கி, ஒரு கூறு அரசற்குக் கொடுத்து, ஒழிந்த ஐந்து கூறினும் தான் கொள்வது ஒரு கூறு என்றற்குத் தன்னையும் சேர்த்து எண்ணினார். மேல் கூறிய அறுவரும் விருந்தின் வகையினரென்று கொள்ளப்படுவர்.

இது, தலையான இல்வாழ்க்கை வாழும் திறன் கூறிற்று. ௪௩.

ழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின், வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

இ-ள்:- வாழ்க்கை பழி அஞ்சி பாத்தூண் உடைத்தாயின் - இல்வாழ்க்கையாகிய நிலை பாவத்தை அஞ்சிப் பகுத்தண்டலை உடைத்தாயின், வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - தீது ஒழுங்கு இடையறுதல் எக்காலத்திலும் இல்லை. [ஒழுங்கு - நடை.]

மேல் பகுக்குமாறு கூறினவர், ஈண்டுப் பகுத்தலானும் பழிக்கஞ்சுதலானும் எய்தும் பயன் கூறினார். ௪௪.

ன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை,
பண்பும் பயனும் அது.

இ-ள்:- இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் - இல்வாழ்க்கையாகிய நிலை (யாவர் மாட்டும்) அன்பு செய்தலையும் அறம் செய்தலையும் உடைத்தாயின், பண்பும் பயனும் அது - அதற்குக் குணமாவதும் பயனாவதும் அவ்விரண்டினையும் உடைமைதானே.

௧௮