பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லற வியல்

ங்கலம் என்ப மனைமாட்சி : மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

இ-ள்:- மனைமாட்சி - மனையாள் ஒழுக்கமுடைய ளாதலை, மங்கலம் என்ப - (ஒருவனுக்கு) அழகென்று சொல்லுப : நல்மக்கள் பேறு அதன் மற்று நன்கலம் என்ப - நல்ல மக்களைப் பெறுதலை அவ்வழகின் மேலே நல்ல அணிகல மென்று சொல்லுப (ஆன்றோர்). [என்ப என்பது பின்னரும் கூட்டப்பட்டது.]

இது, நல்ல மனைவியும் மக்களும் ஒருவனுக்கு அழகும் அணியுமா மென்றது : அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்தது மாம். ௬0.

எ-வது.-மக்கட்பேறு.

அஃதாவது, மக்களைப் பெறுவதனா லாம் பயன் கூறுதல். இல்வாழ்வான் கடன்களுள் தென்புலத்தார்க்குச் செய்யவேண்டுவது மக்களாலன்றி இறுக்கமுடியாமையின் இஃது ஈண்டுக்கூறப்பட்டது.

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை, அறிவுடைய
மக்கட்பே றல்ல பிற.

இ-ள்:- பெறும் அவற்றுள் - (ஒருவன்) பெரும் பொருள்களுள், அறிவுடைய மக்கள் பேறு - அறிவுடைய மக்களைப் பெறுதல் (போலப் பயன்படுவது), அல்ல: பிற - ஒழிந்தபொருள்களுள், யாம் அறிவது இல்லை - யாம் கண்டறிவது இல்லை. [கண்டறிவது - பொறிகளால் அறியும் பொருள். ஒழிந்த - மக்கட்பேறல்லாத.]

இஃது, அறிவுடைய மக்களால் பெற்றோர் சிறந்த பயனை அடைவ ரென்றது. ௬௧.

ழுபிறப்பும் தீயவை தீண்டா, பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

௨௪