பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கட்பேறு

இது, மக்கள் புகழையெய்துதல் தாய்க்கும் இன்பம் பயக்கு மென்றது. ௬௮.

ந்தை மகற்காற்றும் நன்றி, அவையத்து
முந்தி இருப்பச் செயல்,

இ-ள்:- தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை மகனுக்குச் செய்யும் உபகாரம், அவையத்து முத்தி இருப்ப செயல் - அவையகத்தின் கண்ணே (அவன்) முந்தி இருக்குமாறு (அவனுக்குக்) கல்வி உண்டாக்குதல்.

இது, மகனைக் கல்வியுடைய னாக்குதல் தந்தையின் கடனென்றது. ௬௯.

கன்தந்தைக் காற்றும் உதவி, இவன் தந்தை
என்னோற்றான் கொல்என்னும் சொல்,

இ-ள்:- மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி - மகன் தந்தைக்குச் செய்யும் உபகாரம், இவன் தந்தை என் நோற்றான் என்னும் சொல் - (இவனைப் பெறுதற்கு) இவன் தந்தை என்ன தவம் செய்தான் என்று உலகத்தார் சொல்லும் சொல்லைப் படைத்தல். [கொல்-அசை.]

நெறியின் ஒழுகுவாரை உலகத்தார் புகழ்வராதலான், மகனும் ஒழுக்கமுடையவ னாக வேண்டு மென்று. இது கூறிற்று. ௭0.

அ-வது.-அன்புடைமை.

அன்புடைமை யாவது, தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதலுடையவ னாதல், இல்வாழ்வான் தனது வாழ்க்கைத் துணை மக்கள் முதலியவரிடத்து அன்புசெலுத்துதல் அவ்வாழ்க்கைக்கு இன்றியமையா ததொன் றாதலான் இஃது ஈண்டுக் கூறப்பட்டது.

ன்பி லதனை வெயில்போலக் காயுமே,
அன்பி லதனை அறம்.

௨௭