பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விருந்தோம்பல்

இ-ள்:- அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அன்பினையும் (வெளிப்படாது) அடைக்கும் தாழ் உளதோ? ஆர்வலர் புன் கண் நீர் பூசல் தரும் - அன்புடையார்மாட்டு உளதாகிய புல்லிய கண்ணின் நீர் தானே ஆரவாரத்தைத் தரும்.

இது, பிறர் துன்பத்தைக் கண்ட மாத்திரத்தில் அன்புடையார்ககுக் கண்ணீர் பெருகு மென்றது. ௮0.

௯.-வது-விருந்தோம்பல்.

விருந்தோம்பலாவது, உண்ணுங்காலத்துப் புதியார் வந்தால் பகுத்துண்ணுதல், தென்புலத்தார் முதலிய ஐவருள் விருந்தினர் முதற்கண் ஓம்பப்படுதற் குரியராதலானும், அவரை ஓம்புதல் அன்புடைமை காரணமாக நிகழ்வதொன் றாகலானும் இஃது ஈண்டுக் கூறப்பட்டது.

ருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

இ-ள்:- இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - இல்லின் கண் இருந்து (பொருளைப்) போற்றி வாழும் வாழ்க்கையெல்லாம், விருந்து ஓம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு - (வந்த) விருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.

இஃது, இல்வாழ்வதே விருந்தினரை ஓம்புதற்காக என்றது. ௮௧.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டும்பாற் றன்று.

இ-ள்:- விருந்து புறத்ததாக தான் உண்டல் - விருந்தினர் இற்புறத்தாராகத் தானே உண்டல், சாவா மருந்து. எனினும் - சாவாமைக்காக உண்ணும் மருந்தாயினும், வேண்டும் பாற்று அன்று - வேண்டும் பகுதியுடைத் தன்று. [புறத்ததாக என்பது ஈறுகெட்டு நின்றது.]

௩௧