பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

யிருக்கின்றன. அன்றியும், அதில் சில குறள்களின் மூலமும் உரையும் சிதைந்தும் குறைந்து மிருக்கின்றன.

பின்னர், மஹாமஹோபாத்தியாயர் மகா-௱-எ-ஸ்ரீ, உ. வே. சாமிநாதையரவர்களிடத்துள்ள மணக்குடவருரைப்பிரதியைத் தருவித்துப் பார்த்தேன். அது, மேற்கூறிய அரசாட்சிப் புத்தகசாலைப் பிரதியினின்று பிரதி செய்யப்பட்டதாகத் தெரிந்தது. ஆயினும், அதனையும் ஸ்ரீ. சகஜாநந்த சுவாமி யவர்களையும் துணையாகக் கொண்டு, எனது பிரதியில் ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹாரம் என்னும் மூன்றையும் புரிந்து மணக்குடவருரையை ஒருவாறு பூரணமாக்கி அச்சிற்குக் கொடுத்தேன்.

அஃது அச்சாகிவருங்காலையில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி சுதேசபாஷா அத்தியகஷகர் ஸ்ரீமான் தி. செல்லகேசவராய முதலியாரவர்களும், சென்னைக் கிரிஸ்டியன் கல்லூரி சுதேசபாஷா அத்தியகஷகர் ஸ்ரீமான் த. கனக சுந்தரம் பிள்ளையவர்களும் அதனைப் பலமுறை பார்த்துச் சீர்படுத்தித் தந்தார்கள். அவர்களது அவ்வுதவியாலும், தென்னாபிரிக்காவிலுள்ள இந்திய சகோதரர்களது பொருளுதவியாலும், அறத்துப்பால் அச்சாகி முடிந்து இப்புத்தக வடிவமாக வெளிவருகின்றது.

மணக்குடவரும் பரிமேலழகரும் அதிகார முறையிற் சிறிதும் குறட்பாக்களின் முறையில் பெரிதும் வேறுபட்டிருப்பதோடு, பல குறள்களில் வெவ்வேறு பாடங்கள் கொண்டும், பலபல குறள்களுக்கு வெவ்வேறு பொருள்-

iv