பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

கள் உரைத்து முள்ளனர். இவ்வேற்றுமைகளைக் காண்பார் திருக்குறளின் பெருமையையும் அதன் மூலபாடங்கள் வேறுபட்டுள்ள தன்மையையும் நன்கு அறிவதோடு, குறள்களுக்கு இருவரும் உரைத்துள்ள பொருள்களைச் சீர் தூக்கிப்பார்க்கவும் புதியபொருள்கள் உரைக்கவும் முயலுவர். அவர் அவ்வாறு செய்யவேண்டு மென்னும் விருப்பமே, யான் இவ்வுரையை அச்சிடத் துணிந்ததற்கு முக்கிய காரணம்.

ஆண்பாலாரும் பெண்பாலாருமான வித்தியார்த்திகள் இந்நூலை எளிதில் கற்குமாறு இதன் மூலத்தையும் உரையையும் மணக்குடவர் கருத்திற்கு இயைந்தபடி சந்தி பிரித்துப் பதிப்பித்துள்ளேன். உரையில் யான் சேர்த்த எனது சொந்தச்சரக்குகளை [ ] இவ்வித இணைப்பகக் குறிக்களுக்குள் அமைத்துள்ளேன். இப்பதிப்புரையின் பின்னர் அறத்துப்பாலின் அதிகார அட்டவணை யொன்று சேர்த்துள்ளேன். குறள்களின் முதற் குறிப்பகராதி முதலியன நூலின் முடிவில் சேர்க்கப்படும்.

இந்நூலை யான் அச்சிடுதல் சம்பந்தமாக மஹா மஹோபாத்தியாயர் மகா-௱-௱-ஸ்ரீ. உ. வே. சாமிநாதையரவர்களும், ஸ்ரீ. சகஜாநந்த சுவாமியவர்களும், ஸ்ரீமான் தி. செல்வகேசவராய முதலியாரவர்களும், ஸ்ரீமான் த. கனகசுந்தரம் பிள்ளையவர்களும், தென் ஆபிரிக்காவிலுள்ள இந்தியசகோதரர்களும் எனக்குச் செய்த மேற்குறித்த நன்றிகள் “காலத்தினாற் செய்த”வையும் “எழு

v