பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொல்லாமை

பிறவாமை உண்டா மாதலால், கூற்றுச் செல்லா தென்றார்.

இது, கொல்லாமையின் பயன் கூறிற்று, ௧௭௭.

யிருடம்பு நீக்கியார் என்ப, செயிருடம்பூண்
செய்யாத வாழ்க்கை யவர்.

இ-ள்:- செயிர் உடம்பு ஊண் செய்யாத வாழ்க்கை யவர்-குற்றமான உடம்பினையும் ஊணைச் செய்யாத மனைவாழ்க்கையினையும் உடையாரை, உயிர் உடம்பு நீக்கியார் என்ப-(முற்பிறப்பின் கண்) உயிரை உடம்பினின்று நீக்கினரென்று கூறுவர் (பெரியோர்).

[குற்றமான உடம்பு-உறுப்புக் குறைந்ததும் நோய் கூடியதுமான உடம்பு.]

இது, கொலையினால் வரும் குற்றம் கூறிற்று. ௧௭௮.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து.

இ-ள்:- புன்மை தெரிவார் அகத்து-பொல்லாமையை ஆராய்வாரிடத்து, கொலைவினைய ராகிய மாக்கள் வினைப்புலையர்-கொலைத்தொழிலினை யுடைய மாக்கள் தொழிற்புலையராகுவர்.

[மனவறி வின்றி ஐம்பொறி யறிவை உடைய மனித உருவினரை மாக்களென்பர் தொல்காப்பியனார்.]

இது, கொலைவினையரை உலகத்தார் கன்ம சண்டாள ரென்ப ரென்றது. ௧௭௯.

ன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.

இ-ள்:- கொன்று ஆகும் ஆக்கம் - (ஓர் உயிரைக்) கொன்று தின்ற ஆக்கமானது, நன்று ஆகும் பெரிது ஆக்கம் எனினும்-நன்

௬௫

9