பக்கம்:திருவள்ளுவர் திருக்குறள் மணக்குடவருரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

திருவள்ளுவர்
திருக்குறள்.
மணக்குடவருரை.

 

அறத்துப்பால்.

 

பாயிரம்.

[பாயிரமாவது, நூன்முகம்.]

முதலாவது.--கடவுள் வாழ்த்து,

[கடவுள் வாழ்த்தாவது, கடவுளை வாழ்த்தும் வாழ்த்து.)

கர முதல எழுத்தெல்லாம்; ஆதி
பகவன் முதற்றே உலகு.

இதன் பொருள்:- எழுத்தெல்லாம் அகரம் முதல - எழுத்துக்களெல்லாம் அகரமாகிய எழுத்தைத் தமக்கு முதலாக உடையன; (அவ்வண்ணமே), உலகு ஆதிபகவன் முதற்று - உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக உடைத்து,

உலககாரணன் ஆதிபகவ னென்றார்.

ற்றதனா லாய பயனென்கொல், வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்?