இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருவாசகத் தேன் ☐ 91
ஆம்! இறைவன் நிரந்தரம்! ஆதி! உயிர் நிரந்தரம்! ஏன்? ஆணவம் கூட, தன் கொட்டமடங்கிக் கிடக்கும். அதற்கும் கூட அழிவில்லை! அழிவில்லாத நிரந்தரமான கடவுள் சந்நிதியில் அழிவு ஏது? மாற்றங்களே நிகழும்! இறைவனயும் நீதியையும் சார்ந்து வாழும் உயிர்களும் நிலையாக இன்ப அன்பில் தங்கி இன்புறும்.
நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவ ரொடுங் கூடேன்
ஏதமே பிறந்திறங் துழல்வேன் தனை
என்னடி யான் என்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
நிரந்தர மாய் நின்ற
ஆதி யாண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயம் கண்டோமே!
(அதிசயப்பத்து- 2)