பக்கம்:திருவாசகத்தேன்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சிவன் திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ளவன். எல்லா உயிர்களையும் கணக்கின்றி எல்லை கடந்து ஆட்கொண்டருளும் தண்ணளியுடையவன்; பெரியோன்; தனக்குவமை இல்லாதவன்.

திருப்பெருந்துறை சிவனுக்கு விண்னும் மண்ணும் தழுவிய புகழ் உண்டு. புகழ்ப்படுவது புகழ். இறைவன் புகழ்ச்சியைக் கடந்தவன். புகழ்ச்சியைக் கடத்த போகம் என்று போற்றுவார் மாணிக்கவாசகர்.

இந்த உலகத்தில் வாழும் மக்கள் புகழுக்கு ஆசைப்படுபவர்கள். பதவிகளுக்கும் பெருமைகளுக்கும் ஆசைப்படுபவர்கள்! ஆனால் புகழ் என்ற சொல் காலத்தினால் பொருளற்றதாக—— விளம்பரமாக மாறிவருகிறது. மனிதர்களிடையில் மட்டும் தானா? தேவர்களிடத்திலும் கூட இந்தப் பதவி, புகழ் ஆசை உண்டு. தேவர்களின் பதவி ஆசைதானே தக்கன் வேள்வி! வேள்வியில் சொரியப் பெறும் அவி, சிவபெருமானுக்கே உரியது. ஆனால் மற்றைத் தேவர்களும் அவிப்பொருளுக்கு ஆசைப்பட்டனர். தக்கனைக் கொண்டு வேள்வி இயற்றினர் தேவர்கள். உயர் பீடத்தில் அமர்ந்தனர்; அவிப் பொருளைப் பெற்றனர்; இல்லை, இல்லை! மாணிக்கவாசகர் வாக்குப்படி 'தின்றனர்'. தகுதியில்லாத ஒன்றினைப் பெருமை கருதியும் சுவை கருதியும் உண்டனர் என்பது 'தின்றனர்' என்று இழிவாகப் பேசப்படுகிறது. இங்ங்னம் பெருமை கருதி வேள்வியில் சொரிந்த அவிப்பொருளைத் தின்ற தேவர்கள்—— கடலில் எழுந்த அமுதையும் உண்டனர். நஞ்சு கடலில் எழுந்தபோது தேவர்கள் என்ன செய்தார்கள்? ஆபத்தில் காப்பதன்றோ தலைமையின் இலக்கணம். ஆபத்தில் காக்கும் தலைமையே புகழுக்குரியது. நஞ்சைக் கண்ட தேவர்கள் தலைதெறிக்க ஓடினர். சிவபெருமானை நோக்கிக் காப்பாற்றும்படி அழுதனர்; அரற்றினர். சிவபெருமானும் நஞ்சினை