பக்கம்:திருவாசகத்தேன்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

போவேன்! நான் செத்துப் போனால் எல்லோரும் சிரிப்பர்! வேண்டாம் ஐயனே அருள் செய்க!

இறைவா! அனுபவித்த அல்லல்கள் போதும்! இனி மேலும் அல்லல்களைத் தராதே! ஒறுத்திடாதே பணி கொண்டு அருள்செய்! ஒரோவழி நான் பணி செய்ய மறுத்தால் என்னைப் பலரறியக் கூவியழைத்துப் பணி கொள்! பலரறியப் பணி கொள்! பணி செய்தலே வினை நீக்கத்திற்கு வழி! இறைவா, திருப்பெருந்துறை இறைவா அருள் செய்! என்று பாடுகிறார் மாணிக்கவாசகர். அத்திருப்பாடல் இது.

          அடியேன் அல்லல் எல்லாமுன்
              அகல ஆண்டாய் என்றிருந்தேன்
          கொடியே ரிடையாள் கூறாtளம்
              கோவே! ஆ, வ என்றருளிச்
          செடிசேர் உடலைச் சிதையத(து)
              எத்துக்கு எங்கள் சிவலோகா?
          உடையாய் கூவிப் பணி கொள்ளாது
              ஒறுத்தால் ஒன்றும் போதுமே!

(குழைத்தபத்து- 2)