பக்கம்:திருவாசகத்தேன்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 147


சமூகம்- சமுதாயம் என்ற அமைப்புத் தோன்றியது, ஒருவரையொருவர் தாங்குவதற்காக, வாழ்விப்பதற்காகவேயாம்.

இந்த உலக அமைவை- இயற்கை நோக்கின் ஒப்புரவுநெறி பேணத்தக்கதாகவே அமைந்துள்ளது. ஒன்றின்றி ஒன்றில்லை என்பதை நியதியாக விளங்குகிறது. ஆனால் மனிதன் உயிரியல் இயற்கை- மனித இயல்பைப் பெரிதும் முயன்று அழிக்கிறான். அதன் விளைவே கெட்ட போரிடும் உலகத்தின் தோற்றம்! ஏன் இந்த உலகத்தில் பஞ்சம்? பாரதி காரணம் சொல்கின்றான்.

கேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல
கினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா,
கர்ரான கிலத்தைப் போய்த் திருத்த வேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு;
சிவன் செத்தா லன்றி, மண்மேல் செழுமை உண்டு

(பாரதி அறுபத்தாறு- 61)

என்று பாடினான். இன்று என்ன நிலை? மண்மேல் செழுமையைக் காணோம். “சிவன் செத்து” விட்டானா? நஞ்சுண்டும் சாகாத சிவன் எப்படிச் சாகமுடியும்? சாவாதவன் மூவாதன் சிவன், சிவன், மனிதகுலம் நெறிமுறை தவறித் தறிகெட்டுப் போவதைக் கண்டு திகைத்துச் சிலையாக நிற்கிறான்? அவ்வளவுதான்!

இன்றோ சமூகம் இடறி விழுகிறது; ஒருவன் முன்னேறுவதற்கு இடையூறுகள் செய்கிறது. இடறி விழுந்து விட்டால் எடுத்துத் தூக்க மறுக்கிறது. உண்மையில் சமூகம் நம்மீது சவாரி செய்கிறது. ஏசுகிறது; பேசுகிறது; இழிவு செய்கிறது. மானம், மரியாதை