பக்கம்:திருவாசகத்தேன்.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இத்தகு தீய வாயில்களை அடைத்து நன்னெறி வாயிலைச் சார்தல் வேண்டும். ‘கடவுள் ஒன்று’ என்ற துணிவு வேண்டும். “இவர் தேவர், அவர் தேவர் என்று ஆசைகளால் உந்தப்பட்டு அலை மோதல் கூடாது. ஈசனை- இறைவனை நினைந்து நினைந்து கன்று ஈன்ற ஆவின் மனம் போலக் கசிந்துருகி அழக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதுவே ஆன்மிக வாழ்க்கை; சமய வாழ்க்கை.

நெறிமுறை பிறழ்ந்த சமூகத்தின் மதிப்பீட்டை எதிர்பார்க்கக் கூடாது; புகழை விரும்பி அலையக்கூடாது. பழிச் சொற்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். கடவுள் உண்டென்றும் ஒன்றென்றும் துணிதல் வேண்டும். அக்கடவுளை ஆவின் மனம் போல, நினைந்து நினைந்து கசிந்துருகி வழிபடல் வேண்டும்.

சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
கானது ஒழிந்து காடவர் பழித்துரை
பூனது வாகக் கோணுத லின்றிச்
சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்
கதியது பரம அதிசய மாகக்
கற்ற மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வம் கனவிலும் கினையாது.

(போற்றித் திருவகவல் 68-74)