பக்கம்:திருவாசகத்தேன்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

போன்றது. அறியாமையின்பாற்பட்டு சாக்கை நனைத்துத் தூக்குமாப் போலே வினைகள், செயல்கள் பலவற்றைச் செய்து கொண்டும் அவ்வினைகள், செயல்களின் ஈட்டல்கள்- இழப்புகள், இன்பம்- துன்பம் ஆகிய உணர்வுகளில் சிக்கிக் கொண்டும் மத்துறு தயிர் போலச் சுழன்று வினையாகவே ஆகிக் கிடக்கும் பொழுது- ஆன்மபோதத்தில் திளைக்கும்போது இறைவன் ஆன்மாவின் விருப்பம் அறியாமல் அவனே புகுந்து ஆட்கொள்ளுதல் இயல்பு- கருணை.

அறியாதார் மாட்டு அறிவுடையோர் வெறுப்புக் கொள்ளலாகாது. அன்போடு பழகி, அறிவு தருதல் வேண்டும். மாணிக்கவாசகர் தம்மை அறிவிலாதவர் என்று கூறிக் கொள்ளும் இடங்கள் பலப்பல. அறிய வேண்டுவன் வற்றை அறிதலே அறிவுடைமை. பலருக்கு உலகம் தெரியும். ஆனால், அவர்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது. இத்தகையோருக்குத் தெரிந்ததெல்லாம் சுயநலம்தான். அதுவும் நிர்வாணமான சுயநலம். வெறுப்பனவே செய்யும் வாழ்க்கைப் போக்கு. இத்தகைய வாழ்க்கைப் போக்கு மாறவேண்டுமாயின் அறிய வேண்டியதை அறிதல் வேண்டும். ஆன்மாக்கள் அறிய வேண்டியதை அறியுமாறு செய்து அருள்பாலிக்கவே இறைவன் சிவன் எம்பிரான் ஆலமர் செல்வனாக எழுந்தருளி அறிவித்து உணர்த்துகின்றான்.

விடுதலை பெறுதல் வீடு. வீட்டினை 'வானோர்க்கு உயர்ந்த உலகம்' என்று திருக்குறள் கூறும். வானுலகம் பதவிகள் உலகம். பதவிகளும் மனிதனை மயக்குவனவேயாம். பதவிகள் மனிதர்களைப் பைத்தியமாக்கிவிடும். வீடு பற்றிய அறிவினை உணர்த்தினான் திருப்பெருந்துறை. சிவன். மாணிக்கவாசகருக்கு இறைவன் "மேல் நெறியெலாம் புலமாக்கிய" பண்பினை வியந்து பாடுகின்றார்; பரவுகின்றார். வெட்ப தட்பம், பயம் முதலியனவற்றிலிருந்து விடுதலை தந்து, பாதுகாப்புத்