பக்கம்:திருவாசகத்தேன்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 173

தருவது மண்ணகத்து வீடு. அதுபோல ஆன்மா, ஆணவ. வெப்பத்திலிருந்து விடுதலை பெற்று மாசில் வீணையாக, மாலை மதியமாக, iசு தென்றலாக, இளவேனிலாக விளங்கும் இறைவன் திருவடிகளில் தங்கிப் பாதுகாப்புப் பெறுதல் வீடு. இந்த வீடு பற்றிய அறிவினை, உணர்வினை, அனுபவத்தினை மாணிக்கவாசகருக்குத் திருப்பெருந்துறையுறை சிவன் அருளிச் செய்தனன். இறைவனைத் தாயிற் சிறந்த தயாவுடையான் என்று போற்றும் மாணிக்கவாசகர், அறிவு தந்து ஆட்கொண்டு அருளிய இறைவனை- சிவனை 'எந்தை' என்று போற்றுகின்றார். அறிவு தரும் பொறுப்பும் கடமையும் தந்தைக்கே உண்டு என்பதால் இங்ங்னம் கூறினார்.

அறியாமை அகன்று விட்டது. இருள்சேர் இரு. வினையும் இல்லை. என்றும் பிரிவிலா அருளும் கிடைத்து விட்டது. ஆயினும் வேம்பு தின்ற புழுப்போல, எலும்பு கடித்த நாய்போல மீண்டும் ஆன்மாவின் நெஞ்சு கீழ்மை நோக்கியே அழைத்துச் செல்ல விரும்புகிறது. நெஞ்சு போராடுகிறது. ஆன்மாவின் நலத்துடன் ஆன்மாவின் விருப்பத்திற்கு மாறாக நெஞ்சு மாறுபடுகின்றது. தன்னுடன் மாறுபட்டு நின்று போராடும் நெஞ்சை, திருஞானசம்பந்தர் சரிக்கட்டித் தன் வழிக்கு அழைக்க, முயற்சி செய்து வெற்றி பெற்றார்.

          "நீ நாளும் நினைவாய் கன் கெஞ்சே
          சா நாளும் வாழ் நாளும் யாரறி வார்."

என்றருளியுள்ளமையைக் கற்றறிக.

நெஞ்சைத் தன் வசம் வைத்துக்கொள்வது அவசியம். நெஞ்சு எங்கும் செல்லும்; எதையும் சொல்லும்; எதையும். செய்யும். பதைந்துருகும் பாழ் நெஞ்சம். "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே!" என்று ஏசுவார் மாணிக்கவாசகர். இன்று மிகமிக மோசமான் மனிதர்கன்கூட, உமி குற்றிக்கை ஓய்வாதல்போல் வாழ்கிறவர்கள்கூட, பயனற்ற