உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 175

லாலும் காண இயலாத இறைவன் எளியேனை ஆண்டு கொண்டருளினர். ஆண்டுகொண்டருளியதுடன் தொண்டனாகவும் கொண்டருளிய அருளிப்பாட்டை என்னென்பது? அன்பு காட்டினால் போதாது; அருள் செய்தால் போதாது. வேலை- தொண்டு செய்யப் பணித்தால் தான் உறவு ஆழம்படும்; உறுதிப்படும் என்று பேசுகிறார். ‘கவிப் பணி கொள்’ என்றும், “எது எயைப் பணி கொள்ளுமாறு அது கேட்போம்” என்றும் அருளியுள்ளமை யைக்கற்றுத்தெளிக.

தொண்டு செய்ய ஒருப்படுமின்! தொண்டராக விளங்குமின்! இறைவன், திருப்பெருத்துறையுறை சிவன் ஆட்கொண்டருளியதுடன் தொண்டனாகவும் கொண்டருளியதற்கு ஏது கைம்மாறு இல்லை, இல்லை! அதனால் கைம்மாறு உண்டோ என்று நெஞ்சை நோக்கிக் கேட்கின்றார். நெஞ்சு, “இல்லை இதற்கு ஓர் கைம்மாறு” என்று கூறுகிறது.

கீழ்மையே செய்து கெடுக்கும் நெஞ்சத்தினை மாணிக்கவாசகர் தன் வசப்படுத்திக் கொண்டு திருப்பெருத் துறையுறை சிவன் புகழ் பாடும்படி செய்தது.புகழ்மிக்க செயல்.

திருவாசகம் ஓதுதல் மூலம் நாளும் நமது நெஞ்சத்தைத் திருத்துவோம்! நம் வசப்படுத்துவோம்! இறைவன் புகழ் பாடிப்பரவுவோம். தொண்டு செய்வோம்! நம்மைச் சிவமாக்கி ஆட்கொண்டருளும் மாண்க்கவாசகர் திருவடித் தாமரைகள், போற்றி போற்றி! அறிவு தந்து ஆட்கொண்டருளிய அற்புதத்தைப் போற்றுவோம்.