உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பயனளிக்கும். ஆதலால் பயன் ந்ோக்கி மார்கழி நீராடலையும் 'போற்றி' என்றார்.

இந்தப் பாடலில் இறைவனின்- சிவனின் தனித் தன்மை போற்றப்படுகிறது. ஐந்தொழிலுக்கும் சிவனே உரியவன். சிவனே முழு முதல்வன். சிவனை அறிவாலும் செல்வத்தாலும் காண இயலாது. அன்பினாலும் தொண்டினாலுமே காணலாம் என்பது பெறப்படும் உண்மை! சிவன்- இறைவன் நம்மையெல்லாம் உய்ய ஆட்கொண்டருளப் பிரார்த்தனை செய்வோமாக! வாழ்வோமாக!

திருவாசகம் நாள்தோறும் ஒதுதலே பிரார்த்தனை. திருவாசகம் ஒதினால் சிவஞானம் சித்திக்கும். திருவாசகத்தை நாள்தோறும் ஒதுக.

          போற்றி அருளுக கின் ஆதியாம் பாதமலர்
              போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
          போற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
              போற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
          போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
              போற்றிமால் கான்முகனுங் காணாத புண்டரிகம்
          போற்றியாம் உய்யஆட் கொண்டளும் பொன்மலர்கள்
              போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்!


(திருவெம்பாவை-- 20,)