உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

உடைமை என்பது ஒது மந்திரச்சொல். மனிதர்கள் தன் உடைமைகளைக் காப்பதற்குப் போராடுகிறார்கள். ஆனால், பொது உடைமையைப் பேண யாரும் போராடுவதில்லை. ஏன்? பொது உடைமையை அழிக்காமல் இருந்தாலே பாராட்டலாம். பழங்காலத்தில் உடைமையைப் பொது நலத்திற்காகத் தியாகம் செய்தனர். வீட்டையே நாட்டிற்கு அர்ப்பணித்தார்கள். இப்பொழுது நாட்டையே வீட்டிற்குக் கொண்டு போகிறார்கள். ஆதலால், உடைமை என்ற உரிமையில் இறைவன் ஆன்மாவை- மாணிக்கவாசகரைக் காக்கக் கடமைப்பட்டுள்ளான். "அப்படிக் காக்கத் தவறினால் உன்னை ஊர்ப் பிச்சன் என்று கூறி உன்னைச் சிரிப்பிப்பன்; பழி துாற்றுவன்" என்று இறைவனை எச்சரிக்கிறார் மானிக்கவாசகர், உடையவன் உடைமையைக் கவனிக்க வேண்டாமா? பேண வேண்டாமா? "இறைவன் உடைமையாளன்; ஆன்மா உடைமை" என்பது திருவாசகத்தின் திரண்ட கருத்து.

வீட்டுப் பிராணிகளில் நாய் ஒன்று. நாய் வளர்ப்பது இதயத்திற்கு இதத்தைத் தரும். நாய் அளவற்ற பரிவைக் காட்டும். வளர்ப்பவனைக் காணும் பொழுதெல்லாம் குழைந்து வாலாட்டும். சில உயரிய நாய்கள் வளர்ப்பவனின் சாவிலும் ஒன்றாகச் செல்லும்! இந்த இயல்புகள் நாய்க்கு இயற்கையாய் அமைந்தவையல்ல; வளர்ப்பில் வருபவை நாய் வளர்ப்பில் கவனம் தேவை: ஒருவர் கைப்பட் வளர்க்க வேண்டும். பொதுவாக நாய்க்கு நன்றியுண்டு என்று கற்பிக்கப்படுகிறது! நாய். நன்றியுடையதாயிருத்தல் பொதுப் பண்பு அல்ல; சிறப்புப் பண்பேயோம். வளர்ப்பவனைப் பொறுத்தே இது. அமைகிறது. நாய்களில் தாய் நாயும் குட்டி நாயும் குரைத்துச் சண்டையிட்டுக் கொள்வதைப் பார்த்தாலும் தெரியுமே! ஏன்? சில நாள்களுக்கு வீட்டுப் பணியாள் நாய்க்குத் தீனி கொடுத்து அதை வயப்படுத்திக் கொண்டு