திருவாசகத் தேன் ☐ 31
போன்றது ஆணவச் சார்பு. பள்ளத்திலிருந்து மேட்டினை நோக்கித் தண்ணீரை ஏற்றுவது போன்றது திருவருட் சார்பு. ஆதலால், ஞானப்பயிற்சியில்- திருவருட் சார்பில் கவனம் தேவை. இதனைத்தான் ஞானிகள் "விழித்திரு" என்றனர். ஆன்மாவின் விழிப்புணர்வே ஆணவச் சார்பை மட்டுப்படுத்தும்; திருவருட் சார்பைக் கூட்டுவிக்கும். திருவருட் சார்புடையவர்கள் எத்தொழில் செய்தாலும் ஏதவத்தைப்பட்டாலும் இறைவன் திருவருளையே பற்றுக் கோடாகக் கொள்வார்கள். கை வீசி நடக்கும் மோர்க்காரிக்குக் கவனம் முழுதும் மோர்ப்பானையில் இருப்பதைப் போலத் திருவருட் சார்புடையவர்கள் எந்தப் பணியை மேற்கொண்டாலும்- செய்தாலும் திருவருள் நினைப்பாக இருப்பார்கள். நின்றும் இருந்தும் கிடந்தும் தொழுவார்கள், தொழும்பாய்த் தொண்டு செய்வார்கள். இந்த நிலையை எண்ணி, அழும் கல்வியைத் தேடுக! கசிந்துருகி அழக் கற்றுக்கொள்க! இந்த நிலையில், இறைவனுக்கு உடைமையாகலாம். இறைவனுக்கு உடைமையாம் நிலை எய்திவிட்டால் அவன் காப்பான்! பெருங்காதல் மூளும் ஊனும் உயிரும் உருக வாழலாம்! இன்ப அன்பினை எய்தலாம்! யாதுமோர் குறைவில்லை!
உடையானே கின்றனை உள்கி
உள்ளம் உருகும் பெருங்காதல்
உடையா ருடையாய் கின்பாதம்
சேரக் கண்டு இங்கு ஊர் காயின்
கடையானேன், கெஞ் சுருகாதேன்;
கல்லா மனத்தேன்; கசியாதேன்;
முடையார் புழுக்கடு இது காத்திங்கு
இருப்பதாக முடித்தாயே!
(திருச்சதகம்- 60)