திருவாசகத் தேன் ☐ 39
பெருந்துறை சிவனே! காலகாலனே! ஊழி முதல்வனே! ஊழிப் புழுதியே திருநீறாகக் கொண்டருளும் பெருமானே! என்றும் உள்ளவன் நீ! மெய்ப்பொருள் நீ! நின் திருமேனியில் படிந்துள்ள திருநீறு, ஆன்மாக்களின் வினைவளம் நீறாக அணிந்தருளிய மாண்பு உண்மை அன்பர் நின்னை மேவினார்! நானோ பொய்யன்! நீயோ அன்பருள் புக வைத்தாலும் போய் உய்யும் தரமறியேன்! தகுதியிலேன்! நெறியறியேன்! ஆயினும் நீ பெரியோன்! சிறியேன் பிழையெலாம் பொறுத்தருளும் பெரியோன்! ஆதலால், என்னை இடையில் விட்டுவிட்டுப் போவது அழகா? பொருத்தமா? அருள்கூர்ந்து சொல்லுக" என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.
இத்திருப்பாடலில் "போவதோ சொலாய்" என்பது நினையத்தக்கது. அடைக்கலப் பொருளைப் பாதுகாக்காமல் வறிதே விட்டுச் செல்லல் பெரியோருக்குப் பொருத்தமல்ல என்று எடுத்துக் கூறிய அருமையை அறிக.
மையி லங்கு கற் கண்ணி பங்கனே
வந்தெனைப் பணி கொண்ட பின், மழக்
கையி லங்குபொற் கிண்ண மென்றலால்
அரியை யென்றுனைக் கருது கின்றிலேன்
மெய்யி லங்கு வெண் ணீற்று மேனியாய்
மெய்மை அன்பருள் மெய்மை மேவினார்
பொய்யி லங் கெனைப் புகுத விட்டு நீ
போவதோ சொலா பொருத்த மாவதோ?
(திருச்சதகம்-96)