பக்கம்:திருவாசகத்தேன்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

ணக்கத்துக்குரிய தவமாமுனிவர் குன்றக்குடி அடிகளார் அவர்கள் "திருவாசகத் தேன்" என்னும் ஒப்பற்ற ஆன்மீக இலக்கியச் செல்வத்தை 'கலைமகள்' மாத இதழில் தொடர் கட்டுரையாக எழுதி தமிழ் மக்களுக்கு வழங்கி வந்தார்கள்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் திருவாசகத் தேன் எனும் அரிய செல்வம் நூல் வடிவில் வந்தால் தமிழ் மக்களுக்கு என்றும் பயனுடையதாக இருக்கும் எனக் கருதி வானதி பதிப்பகத்தில் நூலாக்குவதற்கு அவரிடம் அனுமதி கேட்டபொழுது அகமகிழ்வுடன் உடனே இசைவு தந்து நல்லாசி வழங்கி, இந்நூலின் தட்டச்சுப் பிரதிகளை எனக்கு அனுப்பி வைத்தார்கள்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும், சமயநெறிச் சான்றோராகவும், மாபெரும் சிந்தனையாளராகவும், தத்துவ மேதையாகவும் விளங்கியவர்.

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சமயசமூக-பொருளாதாரத் தொண்டுகள் கணக்கிட முடியாதெனினும் அவருடைய மகத்தான இலக்கியப் பணியின் மணிமகுடமாக அவருடைய திருவாசகத் தேன் திகழ்கிறது.