உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi


இந்நூலை, தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கு தமிழ் மக்கள் சார்பில் செலுத்தும் அஞ்சலியாகக் கருதி பக்தி சிரத்தையுடன் வானதி பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளேன்.

ந்நூலில், மாணிக்கவாசகர் சிவ பெருமானை மனமுருகி வழிபட்ட நிலைகளையும், அவர் பெற்ற சிவானந்தத்தையும் தவத்திரு. அடிகளார் அழகுற எடுத்துக் கூறியுள்ளார்கள். அதற்கு மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்திலிருந்து பல பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். சிறு சிறு புராணக் கதைகளையும் சுவைமிக்க உவமான உவமேயங்களையும், திருவாசகப் பாடல்களின் கருத்துக்களை மெய்ப்பிக்க அடிகளார் பயன்படுத்தியுள்ளமை, அவருடைய நுண்மாண் நுழைபுலத்தை எடுத்துக் காட்டுகிறது.

மனித ஆன்மா தூய்மை பெற- மனிதன் இம்மண்ணில் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்காதிருக்க- அம்மனிதன் மேற்கொள்ள வேண்டிய வினை (செயல்) வகைகளையும், வாழ்வியல் நெறிகளையும் மாணிக்கவாசகரின் மணிமொழிகள் வாயிலாகப் பல அறவுரைகளை நமக்கு அடிகளார் வழங்கியுள்ளார்கள்.

இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் சுவை மிக்க தேனுக்குச் சமமாக உள்ளன. மனிதநேயம் -பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை தவத்திரு அடிகளார் தமக்கே உரித்தான தனித்தமிழில் தந்துள்ளார், பல இடங்களில்.

னிமனிதப் போட்டி, பகைமை, வஞ்சக உணர்வுகளே வளர்ச்சிபெற்று நாடுகளுக்கிடையே