பக்கம்:திருவாசகத்தேன்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

களிலிருந்து விடுதலை பெறுதல் துன்பத்திலிருந் விடுதலை பெறுதலுக்குரிய ஒரே வழி. தமக்கு வேண்டுவன. வெல்லாம் மற்றவர்க்கும் வேண்டுவனவே என்ற எண்ணப். போக்கு வளரின் பிணக்குகளைத் தவிர்க்கலாம். தமது உரிமையை அழுத்தாமல் மற்றவர் உரிமைகளை மதித்தால்- வழ்ங்கினால் பிணக்குகள் வரா. அழுக்காறு, புறங்கூறல் ஆகிய உறவுகளுக்கு எதிரான கேடுகளை அகற்றுதல் பிணக்கு வராமல் தடுப்பதற்குரிய தலையாய வழி மற்றவர்களுக்கு ஊறு விளைவிப்பதில்லை என்ற நேர்ன்பு மேற்கொள்வதாலும் பிணக்கினைத் தவிர்த்துப் பெருவாழ்வு வாழலாம்.

பொதுவாகப் பிணக்குகளைத் தவிர்த்து வாழ்தல் மனிதம் சிறக்க வழி பிணக்குகள், சிறியன சிந்தித்து, சிறியன செய்வோர் மாட்டே தோன்றும்! ,பெரியதாக நினைப்பது, விரிந்த பரந்த மனப்பான்மையைப் பெறுவது, நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் பழகுவது, உறவுக்கு முதலிடம் கொடுப்பது, யார்மட்டும். அடக்கமாக இருப்பது ஆகிய நற்பண்புகளை மேற்கொண்டொழுகுதல் பிண்க்குகளைத் தவிர்க்க வழி: பிணக்கு தீய பண்பு. திருவருளுக்கு எதிரானது. ஒருமைக்குப் பகை பிணக்கு. பிணக்கு உடையோர் இம்மையிலும் வாழ்வாங்கு வாழ்தல் இயலாது; மறுமையிலும் பயன் எய்தார். ஆதலால் பிணக்கில்லாத பெருவாழ்வு வாழ முயல்வோமாக!

திருப்பெருந்துறை திருத்தலம்! நமது மலம் மூன்றும் கெட, சிவானந்த் வெள்ளம் மேவிய, குதிரைச் சேவகனாய். எழுந்தருளிய பெருமான் இருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பதால் திருப்பெருந்துறையை வாழ்த்து மின்! திருப்பெருந்துறையை வாழ்த்தின் பிறவிக் காட்டின் கருவும் கெடும் திருப்பெருந்துறை பிணக்கிலாத பெருந்துறை. பிணக்கிலாமையால் பெருந்துறையாயிற்று, பெருந்துறை ஊர்; தலம்! ஆங்குப் பிணக்