66 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்
உள்ளீடு என்ன? அதுவே கைகூடும் க்ரும்பு பிடித்தவர் இறந்ததையும் இரும்பு, பிடித்தவர் வாழ்ந்ததையும் எண்ணுக! ஆணவம் மேலும், மேலும் அடர்த்து 'நான்' 'எனது' என்னும் செருக்கினுள் சிக்கித் தலையால் நடந்து திரிந்து ஆகா வினைகள் மேலும் மேலும் செய்தல் வாழும் முறையன்று, ஆணவத்தின் ஆற்றல் மேலோங்கிப் பிறப்பிற்குரிய வித்து மேலும் விளையாமல் தடுத்துக்' கொள்ள வேண்டும். அதற்குரிய உத்தி, முதலில் பகைப் புலமாக இருக்கிற ஆணவத்தை அனுகூலமாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு 'நான்' 'எனது' என்னும் செருக்கினை அடக்கி ஆண்டு தாழ்வெனும் தன்மை உடையதாக மகவெனப் பல்லுயிரையும் ஒக்க நோக்கி நல்லனவே எண்ணி, நல்லனவே செய்து இடையறாத திருவருள் சிந்தனையுடன் வாழ்ந்தால் மலம் பக்குவமாகி நல்வாழ்க்கைக்குத் துணையாக அமையும். ஆணவத்தின் ஆற்றல் அடங்கிய நிலையில் இறைவனின் இருவருட் சத்தி ஆன்மாவிடத்தில் கருணை பொழியும். இந்தப் பரிபக்குவ நிலையிலும் உயிர்கள்- ஆன்மாக்கள் ஓயாது தொழிற்படும். ஆயினும் பயன் கருதா நிலையில் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற அனுபூதி வாழ்க்கையை எய்தும்,
தாம் அடையும் நல்லனவற்றிற்கு மகிழ்தல், அல்லனவற்றிற்குத் துயருறுதல் நெறியுமன்று; முறையும்ன்று. வெற்றியும் தோல்வியும் ஒரு முடிவுக்குக் கொண்டு வருபவையல்ல தொடர்கதைதான். வெற்றி- தோல்வி என்ற மனப்போக்கு சச்சரவுக்குக் காரணமாக அமையும். இருவனுடைய வெற்றி, தோற்றவனுடைய உள்ளத்தில் அவமானமாக உறுத்தி அவன் மீண்டும் தன் தோல்வியை வெற்றியாக்க முயல்வான். மீண்டும் போர்! ஆதலால், வெற்றியை வெற்றியாகக் கொள்ளாது தோற்றவர்கள். வெற்றி பெற்றதைப் போல மகிழ்தலுக்குரியன செய்து உயர்த்துக! வாழ்த்துக!