உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

துன்பங்கள் பலப்பல! ஆனால் ஒருபோதும் மாணிக்க வாசகர் அஞ்சியது இல்லை. அதனால் மாணிக்க வாசகருக்கு இறைவன் கணக்கில் காட்சிகளைக் காட்டியருளியுள்ளான். திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடி பில் ஞானாசிரியன்; மதுரையில் குதிரைச் சேவகன், வைகை யாற்றங்கரையில் கொற்றாள்! இங்ங்னம் எத்தனை எத்தனை காட்சிகள்! எனவே, "கணக்கிலாத் திருக்கோலம் காட்டினாய்!" என்றார் மாணிக்கவாசகர்.

மாணிக்கவாசகரின் திருவுள்ளம் பிணக்குகளினின்று விடுதலை பெற்றது. இறைவன் தன் விருப்பம் தன் விருப்பமாகக் கொண்டவரானார்! "வேண்டுவதும் உன் தன் விருப்பன்றே!" என்பது மணிமொழி. அறிவால் சிவனே யாய நிலை மாணிக்க வாசகருக்குக்கிடைத்தது.

          பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
              மான்! உன் காமங்கள் பேசுவார்க்(கு)
          இணக்கி லாததோர் இன்ப மேவருந்
              துன்ப மேதுடைத் தெம்பிரான்
          உணக்கி லாததோர் வித்து மேல்விளை
              யாமல் என்வினை ஒத்தபின்
          கணக்கி லாத்திருக் கோலம் வந்து
              காட்டி னாய்கழுக் குன்றிலே!

(திருக்கழுக்குன்றப் பதிகம்-1)