பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கொம்பர் ஆர்-பூங்கொம்பை ஒத்த மருங்குல்-இடை, கூறஇடப்பாகத்தில் உடையவனே. நீற-நீற்றினை உடையவனே.

‘காருணியத்து இரங்கல்’ என்று தலைப்புத் தரப்பெற்றுள்ள இப்பகுதியின் இரண்டு பாடல்களில் (திருவாச 69, 7) அன்னையை இடப்பாகத்து உடையவன் என்ற குறிப்பு வருகிறது. 69ஆம் பாடலில் 'இவ்வாழ்வு ஆற்றகில்லேன்’ என்றும் 70ஆம் பாடலில் 'ஒழித்திடு இவ்வாழ்வு’ என்றும் வேண்டுதலில் ஒரு குறிப்பு உள்ளது போலும்.

ஒருவன் தாயினிடம் சென்று 'இந்த வாழ்வை ஒழிக்க உதவி புரிவாயாக’ என்று கூறினால் தாய் ஒரு நாளும் அதற்கு உடன்பட மாட்டாள். இவ்வாறு வாழ்வை வெறுத்து நொந்துபோனதற்குரிய காரணத்தை அறிந்து அக்காரணத்தைப் போக்க முயல்வதே தாயின் சிறப்பாகும்.

இந்த அடிப்படையிலேயே இந்த இரண்டு பாடல் களிலும் (திருவாச 69, 71) அன்னையை நினைவுகூர்ந்து அடிகளார். பேசுகிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

72.

ஒருவனே போற்றி ஒப்பு இல்
     அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள்
     கோமளக் கொழுந்து போற்றி
வருக என்று என்னை நின்பால்
     வாங்கிட வேண்டும் போற்றி
தருக நின் பாதம் போற்றி
     தமியனேன் தனிமை தீர்த்தே 68

வானோர் குருவன் - தேவர்களின் ஆசாரியன்.

திருப்பெருந்துறை அனுபவத்திற்கு முன்னர், நூற்றுக் கணக்கானவர் இருபத்து நான்கு மணி நேரமும் அடிகளாரைச் சூழ்ந்து இருந்திருப்பர். அந்தக் களேபரத்தி-