பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 115


ஏண் நாண் இல்லா நாயினேன் என் கொண்டு
எழுகேன் எம்மானே 84

பாண்-இச்சகம். ஏண்-ஆற்றல். நாண்-நாணம். என்தன்னைப்படுத்தது-என்னை ஆட்கொண்டது.

‘திருப்பெருந்துறையில் உன்னை உள்ளவாறு கண்டேன். ஆனால் இப்பொழுது உன்னைக் காணும் வழியை அறிந்திலேன். அங்கு நின்னைக் கண்டபொழுது ‘கோலம் ஆர்தரு பொதுவினில் வருக (திருவாச: 2-128) என நீ இனிமையாகப் பேசவில்லையா? நெஞ்சு உரமும் வலிமையும் இல்லாத நாய்போன்ற நான் எதனைக் கொண்டு முன்னேற முடியும்?


89.

மான்நேர் நோக்கி உமையாள் பங்கா
     மறை ஈறுஅறியா மறையோனே
தேனே அமுதே சிந்தைக்கு அரியாய்
      சிறியேன் பிழை பொறுக்கும்
கோனே சிறிது என் கொடுமை பறைந்தேன்
      சிவ மா நகர் குறுகப்
போனார் அடியார் யானும் பொய்யும்
     புறமே போந்தோமே 85

மறையிறு-உபநிடதம். பறைந்தேன்-சொன்னேன்.


இந்தப் பாடலிலும் பொய்பற்றி அடிகளார் பேசுவதை ஆழ்ந்து சிந்தித்தல் வேண்டும். ‘சிவ மாநகர் குறுக’ அடியார்கள் அனைவரும் சென்றுவிட்டனர். இதனை நினைக்கும்போதே, இறைவன் குருவடிவில் வந்து தம்மை ஆட்கொண்டதை நினைக்கின்ற அடிகளார், சிறியேன் பிழை பொறுக்கும் கோனே’ என்கிறார். ஆட்கொள்வதற்கு முன்னர் அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பிழைகளை =யெல்லாம் மன்னித்து அவரை ஆட்கொண்டார். அப்படிப் பட்டவர் அடியாரோடு இவரையும் ஏன் அழைத்துச் செல்லவில்லை? பிழைகள் பொறுக்கப்பட்டுவிட்டமையின்