பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 117


விட்டவர் ஆவோம். அந்தாதிமட்டும் அடிகளார் கருத்தாக இருப்பின் புறமே போந்தோம் என்பதற்கு அடுத்தபடியாக ‘பொய்யும் யானும்’ என்று கூறியிருக்கமாட்டார். முதற் பாடலின் இறுதி அடியின் பெரும் பகுதியை இப்பாடலின் தொடக்கத்தில் பயன்படுத்துகிறார் என்றால், அதில் ஒரு கருத்து இருக்கவேண்டும். அவருடைய வாழ்க்கையில் குருவருள் பெற்ற பின்னர் ஒரே ஒரு முறை அவரோடு உறவுகொண்டாடிய பொய் எந்த அளவிற்கு அவரின் மனத்தை உறுத்துகிறது என்பதை அறிய இந்த அடி உதவுகிறது.

முதற்பாட்டின் இறுதி அடியில் 'யானும் பொய்யும்’ என்று கூறியவர், இங்குப் 'பொய்யும் யானும்' என்று கூறவது அந்தப் பொய் தனக்குச் செய்த பெருங்கேட்டை அவர் மறக்கவில்லை என்பதை அறிவிக்கவே. இவ்வாறு கருதுவதற்குக் காரணம், 'புறமே போந்தோம்’ என்பதற்கு மோனையாக பொய்யை இங்கு முன்னுரிமைப் படுத்தவில்லை என்பதை உணர்த்தவே. சிவ மாநகருள் நுழைய விடாமல் செய்தது இந்தப் பொய்யோ என்ற நினைவு மனம் முழுதும் நிறைந்திருந்தது. 'புறமே போந்தோம்' என்று கூறியவுடன் யானும் பொய்யும் என்று கூறாமல் பொய்யும் யானும் என்று கூறியது இக்கருத்தை வலியுறுத்தும்.


91.

தாராய் உடையாய் அடியேற்கு
       உன் தாள் இனை அன்பு
பேரா உலகம் புக்கார் அடியார்
      புறமே போந்தேன் யான்
ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைத்தாங்கு
      உன் தாள் இணை அன்புக்கு
ஆரா அடியேன் அயலே
      மயல் கொண்டு அழுகேனே 87

மிலைக்க கனைக்க ஆரா - பொருந்தாத.