பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 19


இறுதி அடியில் வரும் அயலே மயல்கொண்டு அழுகேனே’ என வரும் தொடர், மேலே கூறிய கருத்தை வலியுறுத்துவதாகும்.

92.

அழுகேன் நின்பால் அன்புஆம்
    மனம்ஆய் அழல் சேர்ந்த
மெழுகே அன்னார் மின்ஆர்
     பொன்ஆர் கழல் கண்டு
தொழுதே உன்னைத் தொடர்ந்தா
      ரோடும் தொடராதே
பழுதே பிறந்தேன் என் கொண்டு
     உன்னைப் பணிகேனே 88

பழுதே பிறந்தேன்-பயனின்றிப் பிறந்தேன்.

அழல் சேர்ந்த மெழுகுபோன்று உருகுகின்ற அடியார்களைக் கண்டு, அவர்களோடு சேர்ந்து சிவ மாநகர் புகாமல் வீணே உழல்கின்றேன் என்றபடி

93.

பணிவார் பிணி தீர்த்தருளி
      பழைய அடியார்க்கு உன்
அணிஆர் பாதம் கொடுத்தி
      அதுவும் அரிது என்றால்
திணிஆர் மூங்கில் அனையேன்
      வினையைப் பொடி ஆக்கி
தனிஆர் பாதம் வந்து ஒல்லை தாராய்
       பொய் தீர் மெய்யானே 89

திணியார் மூங்கில் - கல் மூங்கில் (வலிய மூங்கில்) கல்மூங்கில் முட்களால் யாரும் அணுக ஒட்டாமல் தடுப்பதுபோல கடமை என்கிறார். கணி - குளிர்ந்த.

பழைய அடியார் பணிவார் என்றதால், அந்த அடியார்களுடைய இயல்பு, தன்முனைப்போடு நிமிர்ந்து நில்லாமல், எப்போதும் பணிந்தே இருக்கும் என்பதைக்