பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


கூறினார். அப்படிப்பட்டவர்களுக்குக் காட்டப்படும் திருவடி 'திணியார் மூங்கிலைப்போல' நிமிர்ந்து நிற்கும் தமக்குக் கொடுப்பது இயலாதென்றால் அதற்கும் ஒரு வழி கூறுகின்றார் அடிகளார்.

மூங்கிலில் இருவகை உண்டு. ஒருவகை மூங்கில் உள்ளீடு இல்லாமல் புறப்பகுதி மட்டும் இருக்கும். அதனை எளிதாக வளைத்து விருப்பம்போல் பயன்படுத்தலாம். மற்றொருவகை மூங்கிலின் உள்ளே, திண்மை பெற்ற பொருள் நிறைந்திருக்கும். உதாரணமாகக் காவலர்கள் வைத்திருக்கும் தடிக்கம்பையும், குண்டாந்தடி என்று சொல்லப் பெறும் ஆறடி உயரமும் கனமுமுள்ள ‘பத்தராசன்கழி'யையும் இங்குச் சிந்திக்கலாம். பத்தராசன்கழி என்பது வட்டார வழக்கு. இந்த மூங்கிலை என்ன செய்தாலும் ஒரு தினையளவுகூட வளைக்க முடியாது. சூடேற்றினால் வளைக்கலாம் என்று தவறாகக் கொள்ள வேண்டா. நெருப்பிலிட்டால் இம்மூங்கில் வெந்து பொடியாகுமே தவிர வளையுமாறில்லை.

இந்த அற்புதத்தைத் 'திணியார் மூங்கில் அனையேன்' என்றார். அடியார்களுக்குக் காட்டப்படும் திருவடி திணியார் மூங்கிலைப்போல நிமிர்ந்து நிற்கும் தமக்குக் கொடுப்பது இயலாதென்றால் அதற்கும் ஒரு வழி கூறுகிறார் அடிகளார். அது வளைந்தால்தானே திருவடி கிட்டும் என்பதை நினைந்து வளைக்க முடியாத ஒன்றை ‘பொடிாக்கி’ என்றார்.

94.

யானே பொய் என் நெஞ்சும்
             பொய் என் அன்பும் பொய்
         ஆனால் வினையேன் அழுதால்
             உன்னைப் பெறலாமே
         தேனே அமுதே கரும்பின்
             தெளிவே தித்திக்கும்