பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஏனைநாடர்-வான்நாடு நீங்கிய ஏனைய நாட்டிலுள்ளவர்கள். இன்னிதாய்-இனிமையாய். ஊனை நாடகம் ஆடுவித்தவா-உடலைத் தந்து உலக அரங்கில் வினைக்கீடாக நடிக்கச்செய்த விதம். வையகத்துடைய இச்சை-உலக வித்தைகள். நையவே-அழிந்து இல்லையாம்படியே. மறையில் ஈறு-ஈறு இல் மறை முடிவில்லாத வேதம்.

எந்த உலகத்தில் உள்ளவர்களும் அறிய முடியாதவனாகிய அவன், அடிகளாரின் ஊனினை உருக்கி உள்ளொளி பெருகுமாறு செய்தான். அம்மட்டோடு நில்லாமல் உலக பந்தங்களில் ஈடுபட்டிருந்த அவர் மனத்தை மாற்றி, அவன் திருவருளைப் பருகுமாறு செய்தான்.

‘ஊனை நாடகம் ஆடுவித்தல்' ஊனினை உருக்குதல் ஆகும். ஞான நாடகம் ஆடுவித்தவா என்பது உள்ளொளியைப் பெருகச் செய்து, அதனால் சிவஞானம் கைவரப் பெற்று, ஞான வடிவினனாகிய அவனை அறிந்து கொள்ளுமாறு செய்ததாகும்.

100.

விச்சுஅது இன்றியே விளைவு செய்குவாய்
      விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும்
வைச்சு வாங்குவாய் வஞ்சகப் பெரும்
       புலையனேனை உன் கோயில் வாயிலில்
பிச்சன் ஆக்கினாய் பெரிய அன்பருக்கு
       உரியன் ஆக்கினாய் தாம் வளர்த்தது ஓர்
நச்சு மா மரம் ஆயினும் கொலார்
       நானும் அங்ஙனே உடைய நாதனே 96

வைச்சு வாங்குவாய்-நிலைபெறுத்தி அழிப்பாய். கொலார்கொல்ல மாட்டார்.

இதுவரை திருவடியைப் பிரிந்து வாழும் கொடுமையான நிலை தமக்கு ஏற்பட்டதை உன்னி, மனம் வருந்தி,